தமிழர்களின் இன அழிப்பிற்கு துணை போகிறாரா அநுர..! சாணக்கியன் சீற்றம்
இலங்கையிலே தமிழ் மக்கள் மே 18ஆம் திகதி நினைவேந்தலின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் போது நாட்டினுடைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மே 19ஆம் திகதி போரினுடைய வெற்றி விழாவை கொண்டாடும் நிலையில் உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக தொடர்ச்சியான கருத்துக்களை வெளியிடுகின்ற அரசாங்கம் உண்மையிலேயே போர்க்குற்றங்களை புரிந்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த விடயத்திற்கு ஒத்துழைப்பை வழங்கலாம். விசாரணைகளை ஆரம்பிக்கலாம்.
ஆனால் உள்நாட்டு விசாரணையும் இல்லை. சர்வதேச விசாரணையும் இல்லை. தொடர்ச்சியாக தமிழ் மக்கள் நீதி இல்லாத ஒரு நிலைக்கு தள்ளுவதுதான் அநுர அரசாங்கத்தினுடைய நோக்கம் என்று தெட்டத்தெளிவாக தெரிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
