டிஜிட்டல் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்ற ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க டிஜிட்டல் பொருளாதார அமைச்சுப் பதவியின் கடமைகளை இன்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
நாட்டை டிஜிட்டல் மயப்படுத்தும் முயற்சிக்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
இந்த விடயத்திற்காக தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிலையாகத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வறுமை ஒழிப்பு
வறுமை ஒழிப்பு, சமூக எண்ணக்கருக்களை மாற்றுதல் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தல் ஆகியன குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கட்டடங்களை நிர்மானிப்பது மட்டும் நாட்டின் வளர்ச்சியாகவிடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக எதிர்வரும் ஐந்தாண்டு காலப் பகுதியில் அரசாங்கம் 15 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
