11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைமைச் சாரணியருமான அநுர குமார திசாநாயக்கவிடம், 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது, உத்தியோகபூர்வ இலச்சினையைக் கொண்ட நினைவுச் சின்னம், தலைமைச் சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாயக்கக்காரவால் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
ஹோமாகம், தியகமவில் 2027ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் 23 வரை நடைபெறவுள்ள 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்த உத்தியோகபூர்வ இலச்சினை வெளியிடப்பட்டது.
அழைப்பு
இந்த ஜம்போரியுடன் இணைந்து, இலங்கை சாரணர் இயக்கத்தின் 115ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இடம்பெறவுள்ளது.
இந்த தேசிய ஜம்போரியில் சுமார் 10,000 உள்ளூர் சாரணர்களும், வெளிநாடுகளிலிருந்து சுமார் 3,000 சாரணர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது, தலைமைச் சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனாதிபதியை இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொசான கமகே, இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, பிரதித் தலைமை ஆணையாளர் சட்டத்தரணி கபில கல்யாண பெரேரா, மன்றக் குழுவின் தலைவர் பொறியியலாளர் கமலநாத் ஜினதாச, ஜம்போரியின் இணை ஏற்பாட்டாளர் ஆணையாளர் பொறியியலாளர் அமில் அபிசுந்தர மற்றும் பல சிரேஷ்ட சாரணர் ஆணையாளர்களும் கலந்து கொண்டனர்.
உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் News Lankasri