இலங்கை உட்பட 45 நாடுகள் தொடர்பில் ஐ.நா. பொதுச்செயலாளர் அறிக்கை
இலங்கை உட்பட 45 நாடுகளிலுள்ள சுமார் 240 சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான பழிவாங்கும் செயற்பாடுகள் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுக்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) ஆவணப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கான அறிக்கையானது நேற்றைய தினம் ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையில், ஐ.நா. மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் ஐல்ஸ் பிராண்ட்ஸ் கெஹ்ரிஸால் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் தினது இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் (Michelle Bachelet), “மனித உரிமைகள் சபைக்கு அளித்த அறிக்கையில் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் போன்ற ஒரு முறைமை இருப்பதாக” தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் “இந்த நிலைமை குடிமை மற்றும் ஜனநாயக இடத்தில் ஒரு குளிர் விளைவை உருவாக்குகிறது மற்றும் சுய தணிக்கைக்கு வழிவகுக்கிறது” என கவலை வெளியிட்டிருந்தார்.
“ஆகவே அரசு முகவர்களின் மிரட்டல் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான கண்காணிப்புகளையும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு” வலியுறுத்தியிருந்தார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
