புதிய தொல்பொருள் திட்டத்தின் ஊடாக ஆராயப்படும் பொலன்னறுவையின் தொன்மை
ஒரு புதிய தொல்பொருள் திட்டத்தின் ஊடாக இலங்கையின் பண்டைய தலைநகரான பொலன்னறுவையின் தொன்மை ஆராயப்பட்டு வருகிறது.
அதிநவீன தரையில் ஊடுருவக்கூடிய ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொலன்னறுவையின் சகாப்தத்தில் மறைந்திருக்கும் தொல்பொருட்கள் மற்றும் கட்டமைப்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
லா ட்ரோப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கீர் ஸ்ட்ரிக்லேண்ட் என்பவர் அதிநவீன தொழில்நுட்பங்களின் கலவையைப் பயன்படுத்தி பொலன்னறுவையின் மர்மங்களை ஆராய்ந்து வருகிறார்.
சாத்தியமான கண்டுபிடிப்பு
பொலநுறுவை பண்டைய நகரத்தின் வளர்ச்சி, நகர்ப்புற வடிவம் மற்றும் அதன் உயர்வு மற்றும் வீழ்ச்சிக்கு பங்களிக்கும் காரணிகளை வெளிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் அவரின் தலைமையிலான குழுவினால் முன்னெடுக்கப்படுகிறது.
தமது இந்தத் தொழில்நுட்பம், பழங்கால கட்டமைப்புகளின் புதைக்கப்பட்ட எச்சங்களை, பாதிப்பு இல்லாமல் கண்டறிய அனுமதித்துள்ளது என்று கீர் ஸ்ட்ரிக்லேண்ட் தெரிவித்துள்ளார்.
களனிப் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியாவின் லா ட்ரோப் பல்கலைக்கழகம், தொல்பொருள் திணைக்களம், மத்திய கலாசார நிதியம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டுக் குழுவினால் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், மேற்பரப்பில் இருந்து மூன்று மீட்டர் வரை புதைந்திருக்கும் சாத்தியமான கண்டுபிடிப்புகள் ஆராயப்படுகின்றன.
பராக்கிரமபாகு அரண்மனை மற்றும் கூட்ட அரங்குகள் போன்ற முன்னர் அறியப்பட்ட கட்டமைப்புகளை விட, வரலாற்றின் இன்னும் பழைய அடுக்கின் புதிரான சாத்தியங்களை இந்த புதிய தொழில்நுட்பம் வெளிப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் பூமியின் அடுக்குகளுக்கு அடியில் புதைந்துள்ள பொலன்னறுவை சகாப்தத்திற்கு முந்தைய சாத்தியமான தொல்பொருட்கள் மற்றும் கட்டமைப்புகளை வெளிக்கொணர்வதே பணியாகும் என்று களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரசாந்தி குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
