வவுனியாவில் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வர்த்தகர்கள், வியாபாரிகளுக்கு அன்டிஜன் பரிசோதனை
வவுனியாவில் பயணத்தடை காலத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதியளிக்கப்பட்ட வர்த்தகர்கள், மரக்கறி விற்பனையாளர்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று காலை சுகாதார பிரிவினரால் இப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோவிட் - 19 இன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நாடு பூராகவும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வழங்க கிராம மட்டத்திலிருந்து நகரம் வரை சில வர்த்தக நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்ட வர்த்தக
நிலையங்களை சேர்ந்தோர், மரக்கறி விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களைக்
கொண்டு செல்லும் சாரதிகள் ஆகியோருக்கு இவ்வாறு கோவிட் தொற்று தொடர்பான அன்டிஜன்
பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



