ஊரடங்கின் போது வீதிகளில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை - இருவருக்கு தொற்று
கோவிட் தொற்று காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் நடமாடியவர்களை வழிமறித்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறிச் செயற்படுபவர்கள் மீது பொலிஸாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், வவுனியா நகரப்பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், வீதியில் நடமாடியவர்களை வழிமறித்து அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுத்துள்ளனர்.
இதனை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் நேரடியாக விஜயம் செய்து கண்காணித்துள்ளார்.
இதன்போது வவுனியா நீதிமன்றம் மற்றும் புகையிரத நிலைய வீதி என்பவற்றில் துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் நடமாடியவர்கள் வழிமறிக்கப்பட்டு 30 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதில் இருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஏனையவர்கள் சுகாதாரப் பிரிவினராலும், பொலிஸாராலும் எச்சரிக்கப்பாட்டு வீடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
