இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் அடிப்படையில் பயணக்கட்டுப்பாட்டை மீறி இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில், இன்று பயணக்கட்டுப்பாட்டை மீறி இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடிய முப்பத்தெட்டு (38) பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் நடைபெற்ற பரிசோதனை நிகழ்வில்,மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri