இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் மட்டக்களப்பில் தீப்பந்த எதிர்ப்பு போராட்டம்
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் மட்டக்களப்பில் தீப்பந்த எதிர்ப்பு" போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (03) திகதி மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றுள்ளது.
அரச வங்கிகள் அனைத்திலும் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் காணப்பட்டு வரும் நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தீப்பந்த எதிர்ப்பு போராட்டம்
இதன்போது, தீப்பந்தங்களை கைகளில் ஏந்தியவாறு, கோசமிட்டபடி எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் மாத்தளை மாவட்டம் உள்ளிட்ட நகரங்களில் மாலை 6.00 மணி முதல் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் "தீப்பந்த எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








