பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்ய ஐ.நா வலியுறுத்து
இலங்கை அரசாங்கம் தனது உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் தற்போது நடைமுறையில் உள்ள மிகவும் ஆபத்தான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மாற்றீடு செய்வதற்காக இலங்கையின் நாடாளுமன்றத்தில் தற்போது ஆராயப்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்து மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பிற்கான ஒரு அர்த்தமுள்ள சீர்திருத்தமாகயிருக்க வேண்டும் ஆனால் இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது கடந்தகாலத்தின் உரிமை மீறல் வடிவங்களை ஆபத்தை கொண்டுள்ளது.
தற்போது உத்தேச சட்டமூலம் கடந்தகாலங்களில் விமர்சனத்தின் பின்னர் கைவிடப்பட்ட சட்ட மூலங்களிற்கு ஒப்பானது இது பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணங்களை மிகவும் பரந்துபட்டதாக வரையறுக்கின்றது.
நீதித்துறையின் உத்தரவாதங்களின் வரம்பை கட்டுப்படுத்துகின்றது குறிப்பாக சட்டபூர்வமற்ற தடுத்துவைத்தல் குறித்த நீதித்துறையின் உத்தரவாதங்களை கட்டுப்படுத்துகின்றது.
மேலும் இந்த சட்ட மூலம் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை மனித உரிமை ஆணைக்குழு பார்வையிடுவதை அந்த இடங்களிற்கு செல்வதை கட்டுப்படுத்துகின்றது தற்போதைய வடிவத்தில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்கும்.
மேலும் இத்தகைய அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதற்கான பாதுகாப்புகள் இல்லை மேலும் பிடியாணை இன்றி பாதுகாப்பு படையினர் தனிநபர்களை கைதுசெய்வதற்கான ஆபத்து அதிகரிக்கும் - இது குறித்த சட்ட அடிப்படைகளை உத்தேச சட்டமூலம் பலவீனப்படுத்தும்.
மேலும் இந்த சட்டமூலம் விசாரணைகளிற்கு முன்னர் நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கும் அனுமதிக்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |