அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் எதிர்ப்பு போராட்டம்! ஜனாதிபதி செயலகத்திறக்கு முன்பாக பதற்றம்
நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்றைய தினம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யுகதனவி மின் நிலையம் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை மின்சாரசபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டணி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி சென்றுள்ளதாகவும், இதனால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆர்ப்பட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இருவர் ஜனாதிபதி செயலகத்திற்குள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.



