போதைப் பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான "முழுநாடுமே ஒன்றாக" எனும் தேசிய செயற்பாடு
விஷ போதைப் பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான "முழுநாடுமே ஒன்றாக" எனும் தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட மட்ட கலந்துரையாடல் இன்று (14) கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
"போதை இல்லாத நாடு.மகிழ்ச்சியான நாளை" என்பதனை உருவாக்குவதனை தொலைநோக்காக கொண்ட மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்கு மாவட்ட செயற்பாட்டுக் குழுவினை ஸ்தாபிப்பதற்கான இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
தேசிய செயற்பாடு
கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய இராமலிங்கம் சந்திரசேகரது தலைமையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்களது பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (14) பி.ப 11 மணிக்கு மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் வடமாகான ஆளுனர் மாவட்ட அரச அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் இரானுவ உயரதிகாரிகள் பொலிஸ் உயரதிகாரிகள் கடற்படையினர் துறைசார் திணைக்கள அதிகாரிகள் பொது அமைப்புகளின் பிரதி நிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.













