நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்!
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (27.04.2023) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் கடந்த மார்ச் 31ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், அதன் வரைவு அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்குக் கடந்த மார்ச் 13 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இன்றைய தினம் (27.04.2023) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உரிமைகளை பாதுகாக்கும் திறன்
இலங்கையில் சொத்து விபரங்களை வெளியிடுவது ஒரு சிலருக்கு விலக்களிக்கப்பட்டு வந்தது.
எனினும், உத்தேச சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி, மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் தமது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை வெளியிட வேண்டும்.
உத்தேச ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம், ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை வழங்கும் நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் திறன் உள்ளது.
அத்துடன், இலஞ்ச ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




