மட்டக்களப்பு விபத்தில் காயமடைந்த மற்றைய இளைஞரும் உயிரிழப்பு
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி, ஓட்டமாவடி - புனாணை எனும் இடத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்று (27.08.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (24.08.2023) மோட்டார் சைக்கிளில் ஓட்டமாவடி நோக்கி சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் 25 வயதான எஸ்.எச்.எம்.அஸாம் எனும் இளம் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதையடுத்து, விபத்தில் படுகாயமடைந்த மற்றைய இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையிலேயே அவர் இன்று (27.08.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய புஹார்தீன் நுஸைக் அஹமட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
