பட்டலந்த சித்திரவதை கூடங்களில் நடந்த அட்டூழியங்களுக்கு மேலும் ஒரு சாட்சி!
பட்டலந்த சித்திரவதைக் கூடங்களில் நடந்த அட்டூழியங்களை வெளிப்படுத்தும் மற்றொரு பாரதூரமான வெளிப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, அரச வங்கி ஒன்றின் அதிகாரியான வாசல ஜெயசேகர என்பவர் சமர்ப்பித்த கடிதம், அவரது வேதனையான அனுபவத்தை விவரிப்பதாக கூறப்படுகின்றது.
1990 அக்டோபர் 17 அன்று, மக்கள் வங்கியின் களனி கிளையில், அவர் பணிபுரிந்தபோது, பேலியகொட பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு, டக்ளஸ் பீரிஸின் கொலைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொலைக் குழு
ஜெயசேகராவின் சாட்சியத்தின்படி, அவர் நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரது கண்களில் மிளகாய்ப் பொடியை வீசப்பட்டது மற்றும் அவரது விரல் நகங்களுக்கு அடியில் ஊசிகள் செருகப்பட்டுள்ளன.
மூன்று நாட்கள் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட பின்னர், ஜெயசேகர படலந்த சித்திரவதைக் கூடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் மேலும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
இதேவேளை ''டக்ளஸ் பீரிஸ் என்னை படலந்த சித்திரவதை அறைகளுக்கு அழைத்துச் சென்றார், அங்கு நான் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடூரமாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டேன்.
எனினும், 1991 பெப்ரவரி 15 ஆம் திகதியன்று அன்று, 50,000 ரூபாய் லஞ்சம் கொடுத்த பிறகு எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் விடுவிக்கப்பட்டேன்.
சித்திரவதை
பின்னர், எனது வேலையை மீண்டும் ஆரம்பிக்க தேவையான ஆவணங்களைப் பெற கூடுதலாக 25,000 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது." என்று வங்கி அதிகாரி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சிட்னி என்று அழைக்கப்படும் ஏர்ல் சுகி பெரேரா என்பவரும் இதேபோல் கடத்தப்பட்டு, அவரிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைவர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்ட அதே காலகட்டத்தில் இந்தக் கடத்தல்கள் மற்றும் கப்பம் பறித்தல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
