படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் வெற்றிடத்திற்கு மற்றுமொரு இலங்கையர்!
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரிந்த குமாரவின் வெற்றிடத்திற்கு மற்றுமொரு இலங்கையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத நிந்தனையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி கொடூரமான முறையில் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பாகிஸ்தானின் முன்னணி ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பிரியந்த குமார கடமையாற்றி வந்தார்.
இந்த நிலையில் பிரியந்தவின் மறைவினைத் தொடர்ந்து அந்த பதவி வெற்றிடத்திற்கு மற்றுமொரு இலங்கையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், குறித்த இலங்கையரின் பெயர் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தான் பிரதமரின் மத நல்லிணக்கத்திற்கான விசேட பிரதிநிதி ஹாபீஸ் மொஹமட் தாஹிர் அஷ்ராபி, அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் விஜேவிக்ரமவை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அச்சம் மிகுந்த நிலையில் இலங்கையர் ஒருவர் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு இணங்கியமைக்காக நன்றி பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.