இலங்கை வரவுள்ள சீனாவின் மற்றுமொரு கப்பல்!
சிறுபோக பயிர் செய்கைக்கு தேவையான நைட்ரஜன் அடங்கிய சேதனப் பசளையை சர்ச்சைக்குரிய சீன பசளை நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சீன நிறுவனத்திடம் இருந்து புதிதாக எதிர்வரும் மார்ச் மாதம் இந்த பசளை தொகையை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சேதனப் பசளைக்கு பணத்தை செலுத்தி சமரசம் செய்துக்கொள்ளும் உடன்பாட்டுக்கு அமைய சீன நிறுவனத்திற்கு 6.2 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பசளை தொகை கிடைத்த பின்னர் மீதமுள்ள தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வரையறுக்கப்பட்ட வணிக பசளை நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பசளை தொகையின் மாதிரிகளை தேசிய தவார தனிமைப்படுத்த சேவை மூலம் சீன நிறுவனத்தின் சார்பிலும் சுயாதீனமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் சீன பசளை கப்பல் இலங்கைக்கு வந்த பின்னர், அதில் உள்ள பசளை தொகையை தேசிய பசளை செயலகம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வுக் கூடங்களிலும் பரிசோதிக்கப்படவுள்ளதாக எனவும் விஜேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.