நாட்டில் மீண்டுமொரு புரட்சி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு- செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு தலைமைத்துவத்தையும் ஆதரவையும் வழங்க தாம் தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் நேற்றுமுன்தினம் கைது செய்த நிலையில், அவரை பார்க்க சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,“எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பில் இடம்பெறவிருக்கும் போராட்டத்திற்கு இளைஞர்கள் வரவிருந்தனர். இதனை தடுக்கும் முகமாக அரசாங்கம் இளைஞர்களை கைது செய்து வருகின்றது.
மக்களுக்கு தங்கள் உரிமைகளுக்காக போராடவும் நாட்டுக்காக குரல் கொடுக்கவும் உரிமை உண்டு. போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நானும் நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்தேன். போராட்டங்களை அடக்க அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை எடுப்பார்களேயானால் நாம் ஒருபோதும் அதற்கு இடமளிக்க மாட்டோம்”என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam