சுதந்திரக்கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு மனு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) புதிய நியமனங்களுக்கு எதிராக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (14.05.2024) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) மற்றும் சட்டத்தரணி கீர்த்தி உடவத்த (Keerthi Udawatta) ஆகியோர் முறையே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவும் செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை மனுதாரர் திஸாநாயக்க தமது மனுவில் கோரியுள்ளார்.
தடை தொடர்பான முடிவு
மேலும், மே 12ஆம் திகதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் சட்டத்தில் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரர், தமது மனுவில் கோரியுள்ளார்.
அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாக குறித்த செயற்குழுக் கூட்டம் சட்டவிரோதமான முறையில் கூட்டப்பட்டுள்ளதாகவும், எனவே, அதில் வழங்கப்பட்ட நியமனங்கள் சட்ட ரீதியாக செல்லுபடியாகாது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்த மனுவின் அடிப்படையில், தடை தொடர்பான முடிவை நீதிமன்றம், நாளைய தினம் அறிவிக்கவுள்ளது.
இதற்கிடையில், அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கும், கீர்த்தி உடவத்தவுக்கும் இடையூறு விளைவிப்பதை தடுக்கும் வகையில் கடந்த மே 13ஆம் திகதி கடுவெல மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
