பெக்கோ சமனின் தாயார் கொலை சம்பவம் - வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கும் சந்தேகநபர்கள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் நேற்றைய தினம் தங்கல்லை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மித்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்தேகநபரை மித்தெனிய பொலிஸார் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதற்கமைவாக, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை நேற்று (23) வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்