வவுனியா வைத்தியசாலையில் கோவிட் தொற்றால் மேலும் ஒருவர் மரணம்
வவுனியா வைத்தியசாலையில் கோவிட் தொற்றால் மேலும் ஒரு ஆண் மரணமடைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கோவிட் சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு (22.08) குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, பட்டானிச்சூர், மூன்றாம் ஒழுங்கையைச் சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
அவரது உடலைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளைச் சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இன்று பிற்பகல் தோணிக்கல் சிவன்கோவலடிப் பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண் ஒருவரும் கோவிட் தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
