நாட்டை முடக்குவதற்கான அச்சத்தை நிராகரிக்கமுடியாது - விடுக்கப்படும் எச்சரிக்கை!
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை வலுப்படுத்த, அரச அதிகாரிகள் உட்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்காது போனால், மற்றொரு முடக்கலை நோக்கி, நாட்டை நகர்த்துவதற்கான அச்சம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் நாட்டில் மற்றொரு கொரோனா அலையின் பரவலைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பொதுமக்கள் பணிபுரியும் எந்த இடத்தையும் காணமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தடுப்பூசி அளவைப் பெறுவதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு காதார அமைச்சகம் மற்றும் அரசாங்கத்திடமிருந்து உரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் தீவிரத்தன்மை குறித்த விழிப்புணர்வு இல்லாமை காரணமாக, கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுக்களில் மற்றும் இறப்புக்களில் திடீர் அதிகரிப்பு பதிவாகி வருவதாகவும் கொலம்பகே கூறியுள்ளார்.

அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை.
பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிவதை தவிர, ஏனைய சுகாதார நடைமுறைகளை மறந்துவிட்டதாகவும் வைத்தியர் கொலம்பகே குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே மற்றொரு கொரோனா தொற்று அதிகரிப்புக்களும் அதிகரித்த இறப்புக்களும் ஏற்படுமானால், அதற்கு அரச, தனியார் மற்றும் ஊடகத் துறைகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri