மற்றுமொரு நீதிபதி பணி நீக்கம்
தவறான நடத்தை குற்றச்சாட்டில் மற்றொரு மாவட்ட நீதிமன்ற நீதிபதியை நீதித்துறை சேவை ஆணையகம் பணிநீக்கம் செய்துள்ளது,
இதன் மூலம் இந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட மொத்த நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
ஓய்வூதிய ஆவணங்களும்
தனி விசாரணையைத் தொடர்ந்து, கம்பஹாவில் பணியாற்றும் ஒரு சிவில் மேல்முறையீட்டு மேல்; நீதிமன்ற நீதிபதி திறமையற்ற செயல்திறன் குற்றச்சாட்டுகளை அடுத்து ஓய்வுப்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கான ஓய்வூதிய ஆவணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மினுவாங்கொட மாவட்ட நீதிபதி மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி இருவரும் தவறான நடத்தை தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகளுக்காக நீதிபதிகள் நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
