இலங்கையில் விலையுயரும் பட்டியலில் இடம்பிடித்த மற்றுமொரு பொருள்
இலங்கையில் ஒரே நாளில் பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில், தொடர்ச்சியாக டொலரின் விலை அதிகரிக்கும் நிலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கின்றமை வழமையான விடயமாக மாறியுள்ளது.
அந்தவரிசையில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலை 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
இவற்றுக்கான புதிய விலை மாற்றப்பட்டியலை தமது சங்கத்தின் www.ccva.lk என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் சமித் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.