அமெரிக்காவின் மற்றுமொரு உயர் அதிகாரி இலங்கை விஜயம்
அமெரிக்க திறைசேரியின் உதவி செயலாளர் ரொபர்ட் கெப்ரோத் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் (Julie Chung) தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர், அரச தலைவர்கள், பொருளாதர தலைவர்களுடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மற்றும் நாட்டின் எதிர்கால பயணம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Today, I welcomed back @USTreasury Dep Asst Sec Robert Kaproth to Sri Lanka. Dep Asst Sec Kaproth is here to meet with government & economic leaders to discuss the way forward on economic recovery for Sri Lanka. pic.twitter.com/IwyjvBvciI
— Ambassador Julie Chung (@USAmbSL) October 25, 2022
ரொபர்ட் கெப்ரோத் சில வாரங்களுக்கு முன்னரும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.