திங்கள் முதல் மற்றுமொரு கட்டண உயர்வு
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புகையிரத கட்டண அதிகரிப்பு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை புகையிரத கட்டணம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும், டீசல் விலைக்கு ஏற்ப குறைந்த பட்ச தொகையாக மட்டுமே கட்டணங்கள் திருத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட் சேவைக் கட்டணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் இந்த நெருக்கடிக்கு ஈடுகொடுக்க முடியாது இலங்கை வாழ் மக்கள் அண்டை நாட்டுக்கு அகதியாக தஞ்சம் கோரும் அவல நிலையும் ஏற்பட்டு வருகின்றது.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் தற்போது புகையிரதக் கட்டணங்களும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் புகையிரதத்தை பயன்படுத்தும் பலர் கடும் இக்கட்டான நிலையை எதிர்கொள்வர்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
