மற்றுமொரு கட்டண உயர்வு! ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி
மற்றுமொரு கட்டண உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணங்கள்
இந்த நிலையில், ஆரம்ப பதிவுக் கட்டணமான 15,000 ரூபா 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி புதிய கட்டணம் 50,000 ரூபாவாகும்.
மேலும், பதிவு புதுப்பித்தல் கட்டணம் 15,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 10,000 ரூபாவில் இருந்து தற்போது 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியின் உரிமம் காலாவதியான முதல் மாதத்தில் தாமதக் கட்டணம் 10,000 ரூபாவாகவும், உரிமம் காலாவதியான 31 தொடக்கம் 90 நாட்களில் 25,000 ரூபாவாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 90 நாட்களுக்குப் பிறகு தாமதக் கட்டணம் 35,000 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
