ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் மேலும் எட்டரை ஆண்டுகள் மீதமாக உள்ளன! - ஷெயான் சேமசிங்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்னும் 8 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து 2030ஆம் ஆண்டிலேயே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக்காலத்தில் இதுவரை ஒன்றரை ஆண்டுகளையே பூர்த்தி செய்துள்ளார்.
இதனால், அவரது பதவிக்காலத்தில் மேலும் எட்டரை ஆண்டுகள் மீதமாக உள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து 2030ஆம் ஆண்டின் பின்னர் தீர்மானிக்க முடியும் எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
