உக்ரைன் மீதான ரஷ்யாவின் வலிந்த போர் - இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி
ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தினால் உலகளாவிய கப்பல் பாதைகள் மூடப்பட்டுள்ளமை இலங்கைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான இலங்கை வருடாந்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்கிறது.
கப்பல் பாதைகள் மூடப்பட்டுள்ளமையினால் இலங்கையின் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து மொஸ்கோ மீதான மேற்குலக பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில், உலகின் மூன்று பெரிய கொள்கலன் கப்பல்கள் நிறுவனங்கள் ரஷ்யாவுடனான தொடர்பினை துண்டித்துள்ளன.
இரு நாட்டுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், தேயிலை ஏற்றுமதியிலும் தாக்கம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.