நாட்டில் மீண்டும் பேரிடியாக மாறவுள்ள மற்றுமொரு பாரிய நெருக்கடி!
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறக்குமதியாளர்கள் அஃப்லாடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ததைப் போன்ற ஒரு நிலைமை மீண்டும் உருவாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின்  இணைப்பாளரான புத்திக டி சில்வா எச்சரித்துள்ளார்.
அரசாங்கம் வழங்கும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரியில்லா சலுகையின் மூலம் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் பாரிய இலாபத்தை ஈட்ட முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நுகர்வுக்கான தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்வதில் நாடு தன்னிறைவு பெற்றுள்ளதால், தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.
10,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான அறியப்படாத எண்ணெய் கையிருப்புகளை தேங்காய் எண்ணெய் எனக் கூறி வர்த்தகர்கள் இறக்குமதி செய்துள்ளனர்.தற்போது இலங்கை துறைமுக அதிகாரசபையின் சேமிப்புக் கிடங்குகளில் அவை உள்ளது.
வெளிநாட்டு கையிருப்புகளை வீணாக்காமல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயை வழங்குவதற்கான திறன் உள்ளதாக சங்க உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கு வெளியிடுவதில் இறக்குமதியாளர்கள் வெற்றி பெற்றால் பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களால் பொருட்களை விற்பனை செய்ய முடியாது நிலை துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
போர் காலத்தில் கூட இப்படி நடக்கவில்லை! - சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்)  | 
    
    
    
    
    
    
    
    
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri