இலங்கை மக்கள் எதிர்நோக்கவுள்ள மற்றுமொரு பொருளாதார நெருக்கடி!
கடந்த வாரம் பேருந்து கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட நிலையில் ரயில் கட்டணத்தையும் அதிகரிக்குமாறு ரயில்வே திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்களம் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருவதற்கும், நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக விமர்சிக்கப்படுவதற்கும் கட்டணங்கள் அதிகரிக்கப்படாததும் ஒரு காரணம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டண உயர்வால் ரயில்களை நோக்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால் ரயில் கட்டணத்தை பஸ் கட்டணத்துக்கு நிகராக வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வாரம் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கான கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 3 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,ஆகக்குறைந்த பேருந்து கட்டணமாக இருந்த 14 ரூபா பேருந்து கட்டணம், 17 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
இந்த பேருந்து கட்டண திருத்தமானது, ஜனவரி மாதம் 5ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
