பாகிஸ்தானில் மீண்டும் பயங்கரவாத குண்டுத் தாக்குதல் : மூவர் பலி
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் அவ்விடத்திற்கு சென்றுள்ளதுடன், அவர்களில் ஒருவர் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
மற்றைய நபர் இராணுவத் தலைமையக வளாகத்திற்குள் குண்டை வெடிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேர் உயிரிழப்பு
எவ்வாறாயினும், இத்தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
CCTV of 2 suicide bombers stormed the Frontier Constabulary headquarters in #Peshawar, northwest #Pakistan, killing 3 in a daylight attack around a crowded spot near a military zone. pic.twitter.com/PcJVUmnoph
— Devesh , वनवासी (@Devesh81403955) November 24, 2025
இதேவேளை கடந்த 11ஆம் திகதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |