மன்னாரில் மேலும் ஒரு தொகுதி பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு
மன்னாரில் இன்று காலை மேலும் ஒரு தொகுதி பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் இணைந்து குறித்த பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் வைத்து மன்னார் மாவட்ட தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் மன்னார் பேருந்து தரிப்பிட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள், பொலிஸார் ஆகியோருக்கு குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளாத மன்னார் பேருந்து தரிப்பிட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளின் சாரதிகளுக்கு நாளை முதல் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படாது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இந்த மாதம் முதலாம் திகதி முதல் தற்போது வரை 142 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தமாக 159 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 2 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri