இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டும் பொது மன்னிப்பு
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டும் பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை பெற்றுக் கொள்ளாது சேவைக்கு சமூகமளிக்காத முப்படையைச் சேர்ந்த படையினருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் இந்த பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவையிலிருந்து விலகுவதற்கு அனுமதி
இந்த காலப் பகுதியில் முறையாக இராணுவ சேவையிலிருந்து விலகுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னதாக விடுமுறை பெற்றுக் கொண்டு சேவைக்கு சமூகமளிக்காதவர்களுக்கு இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் சேவையிலிருந்து விலகுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாக சேவையிலிருந்து விலகும் படையினர் ஏதேனும் கொடுப்பனவுகள் செலுத்த வேண்டியிருந்தால் அந்த தொகையை குறித்த படைக்கு செலுத்தி சேவையிலிருந்து நீங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
