காலி முகத்திடல் போராட்டகாரர்களுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பல அறைகளை காலிமுகத்திடல் போராட்டத்தின் தலைவர்கள் பலர் பலவந்தமாக பயன்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட போராளிகள் போராட்டம் ஆரம்பமானது முதல் அந்த விடுதிகளில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்திய பின்னர் போராட்டக்காரர்கள் அங்குள்ள இணைய சமிக்ஞைகளை பயன்படுத்தி இணையத்தில் அழைப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சேதப்படுத்திய நூற்றுக்கும் மேற்பட்டோரின் கைரேகைகள் எடுக்கப்பட்டு அவர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.