இலங்கையில் மேலும் 45 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!
இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கபட்ட மேலும் 45 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,030 ஆக அதிகரித்துள்ளது. 24 பெண்கள் மற்றும் 21 ஆண்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கோவிட் தொற்று பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , டெல்டா உள்ளிட்ட ஏனைய உருமாறிய வைரஸ் பரவல் காணப்படுகிறதா என்பது தொடர்பில் கண்டறிவதற்கு சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான மாதிரிகளைப் பெற்று மரபணு பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
