இலங்கையில் மேலும் 42 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!
இலங்கையில் மேலும் 42 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1405 ஆக உயர்ந்துள்ளது.
மே மாதம் 14ம் திகதி முதல் இன்றைய தினம் வரையில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று ஆறு கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், 14ம் திகதி முதல் 28ம் திகதி வரையில் 36 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, 14ம் திகதி ஒருவரும், 19ம் திகதி இருவர், 20ம் திகதி ஒருவர், 21ம் திகதி இருவர், 22ம் திகதி இருவர், 23ம் திகதி மூவர், 25ம் திகதி மூவர், 26ம் திகதி இருவர், 27ம் மற்றும் 28ம் திகதிகளில் தலா பத்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று இதுவரையில் 2,827 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 180,538 ஆக உயர்வடைந்துள்ளது.
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan