பசறை இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி
பதுளை (Badulla) பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று (05.05.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த விளையாட்டுப் போட்டியானது பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பலர் பங்கேற்பு
நிகழ்வின் முதன்மை விருந்தினராக பசறை வலய கல்வி பணிப்பாளர் கலந்து கொண்டார்.
கல்வி அமைச்சின் ஊடாக நடைமுறைப்பட்டுள்ள மாணவர்களின் உடலியக்க ஆளுமை திறன் விருத்தியை மேம்படுத்துகின்ற செயற்றிட்ட நிகழ்ச்சி திட்டத்தின் " செயற்பட்டு மகிழ்வோம் "திட்டத்தில் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றுள்ளன.
மேலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்துள்ளனர்.