சுழிபுரம் - அரசடி ஞான வைரவர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா
சுழிபுரம் - பெரியபுலோ அரசடி ஞான வைரவர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவமானது நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி ஆலயத்தின் திருவிழாவானது கடந்த 05.07.2024 அன்று ஆரம்பமாகி, 12 தினங்கள் வெகு சிறப்பாக திருவிழாக்கள் இடம்பெற்றன.
13ஆவது நாளான நேற்றையதினம் பொங்கல் உற்சவம் இடம்பெற்றது.
ஆலயத்தின் கிரியை
ஆலயத்தின் கிரியைகளை சிவசிறி குகன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.
பக்தர்கள் காவடி, பாற்செம்பு, கற்பூரச் சட்டி, அங்கப் பிரதிஷ்டை செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். குறிப்பாக பக்தர் ஒருவர் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்து தூக்குக் காவடி எடுத்து, 130 கிலோமீட்டர்கள் தூரம் தாண்டி வந்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.
பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் வைரவப் பெருமானை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
அத்துடன் 19.07.2024 நாளை வெள்ளிக்கிழமை நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து பெண்கள் பாற்செம்பு எடுத்து வந்து அபிஷேம் இடம்பெறவுள்ளதுடன், வைரவப் பெருமானுக்கு 1008 சங்குகளால் சங்காபிஷேக உற்சவமும் இடம்பெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
