ஆபத்தான கட்டத்தினை நோக்கி புதுக்குடியிருப்பு! மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல்
முல்லைத்தீவில் - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன்,மற்றும் பி.சி.ஆர் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன என சுகாதார வைத்திய அதிகாரி எம்.கெங்காதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாக கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இது கடந்த பத்து நாட்களுக்கு மேலாகப் பலரின் உடல் நிலை தொடர்பில் வெளியான பெறுபேறாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இன்றும் பலர் அறிகுறிகளுடன் வீடுகளுக்குள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவமனையினை நாடவேண்டும். வடமாகாணத்தில் அதிகளவாக கோவிட் தொற்றும் பிரதேசமாகப் புதுக்குடியிருப்பு பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (25) நூறு பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (27) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 29 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமை தொடருமானால் குறுகிய காலத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசமே கோவிட் தொற்றினால் மோசமான நிலைமை எதிர்கொள்ள நேரிடலாம் என மருத்துவ அதிகாரியால் எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் உள்ள ஒருசிலரது நடவடிக்கைகளால்தான் இந்த நிலைமை உருவாகியிருக்கின்றது.
வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளைத் தட்டிக்கழித்து ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட குழுவினர் பிரதேசத்தில் சுற்றித்திரிவது காணக்கூடியதாக இருக்கின்றது. ஒரு சில வியாபாரிகள் தங்களின் நலனுக்காகக் குறிப்பிட்ட சில இடங்களில் தங்கள் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது பலர் முண்டியடித்துக்கொண்டு பொருள்களைக் கொள்வனவு செய்வது இப்பொழுதும் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஒரு சிலரது அசமந்த போக்கினால் புதுக்குடியிருப்பு பிரதேசமே முற்றாகப் பாதிப்படையும் நிலைமை ஏற்படலாம். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகுமானால் எவராலும் மருத்துவர்களால் காப்பாற்ற முடியாமல் போய்விடும்.
ஆகவே தொடர்ந்து வரும் நாட்களில் குறைந்தது இரண்டு வாரங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது அவசியம் எனச் சுகாதார வைத்திய அதிகாரி அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் முல்லைத்தீவில் மேலும் ஒரு கோவிட் உயிரிழப்பு இன்று (29) பதிவாகியுள்ளது.
கோவிட் தொற்று காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று வரை 16 மரணங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் பலர் கோவிட் தொற்றுக்கு இலக்கான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
