இலங்கை வரும் மோடி : எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள்
மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன, தனது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நேரம் வந்துவிட்டதாக கட்சித்தரப்புக்கள் தெரிவித்துள்ளன. எனினும் அந்தக் கட்சி ரணில் விக்ரமசிங்கவின் முறையான பதிலுக்காக காத்திருக்கிறது.
அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவில்லை. எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாகக் கூறி, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு விக்கிரமசிங்க கடிதம் எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர், ஜனாதிபதி வேட்பாளராக அவரது வேட்புமனுவை அங்கீகரிக்க பொதுஜன பெரமுன எதிர்பார்க்கிறது.
ஜனாதிபதி வேட்பாளராக ரணில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கெசினோ உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகருமான தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படவுள்ளார்.
பாலம் அமைக்கும் இந்திய அரசின் திட்டங்கள்
இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் முன்மொழியப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துடன் ஊக்கத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் நாட்டின் முக்கியமான தலைநகரங்களுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரத்தை இந்தியப் பக்கத்தில் இணைக்கும் வகையில் தலைமன்னார் கடற்கரையின் குறுக்கே பாலம் அமைக்கும் இந்திய அரசின் திட்டங்களையும், கிழக்கில் சாத்தியமான வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தமது விஜயத்தின்போது அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |