விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தொடர்பில் இன்று வெளியான அறிவிப்பு! 90 நாள் கால அவகாசம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்புக்களில் இருப்பது என்பது சட்டத்திற்கு முரணான ரீதியில் எட்டப்பட்ட தீர்மானம் என்று கடந்த காலங்களில் பிரித்தானிய நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்த நிலையில், இன்றைய தினம் பிரித்தானிய நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பின் படி விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தடை பட்டியலில் வைத்திருக்க வேண்டுமா இல்லையா என்பதை உள்துறை அமைச்சர் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அதற்காக 90 நாட்கள் கால அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானியாவில் இருக்கும் சிரேஸ்ட சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,