புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியாமல் போன புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டாயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் புலமைப் பரிசில் பரீட்சையை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இரண்டாயிரத்து 338 நிலையங்களில் உயர் தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.
இந்த பரீட்சைகள் நடக்கும் காலப் பகுதியில் பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri