திரிபோசா கையிருப்பு குறித்து வெளியான அறிவிப்பு
பத்தொன்பது இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்படுவதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி குலரத தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதம் வரை தேவையான திரிபோசா வழங்கப்பட்டுள்ளது. மாதாந்த தேவையாக உள்ள 19 இலட்சம் திரிபோசா பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக உணவு ஸ்தாபனத்தினால் 11200 மெற்றிக் தொன் சோளமும், 350 மெற்றிக் தொன் சோயாபீன்ஸ்களும் திரிபோசா தயாரிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார திணைக்களம்
இந்த நாட்டில் திரிபோசாவின் மாதாந்தத் தேவை 19 இலட்சம் பக்கட்டுகள் , மேலும் நாடு முழுவதும் வாழும் அனைத்து கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோசா சுகாதார மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களால் வழங்கப்படுகிறது.
அதேசமயம், சுகாதார திணைக்களத்தினால் நடத்தப்படும் கிளினிக்குகளுக்கு தேவையான திரிபோசா கையிருப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





உக்ரைன் போரை முடிக்க ஐரோப்பிய நாடுகளின் புதிய திட்டம்: Buffer Zone யோசனைக்கு ஜெலென்ஸ்கி மறுப்பு! News Lankasri
