மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் பெயரிடப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தம்பிக்க பெரேரா ஆகிய நால்வரில் ஒருவரே அந்த வேட்பாளராக இருப்பார் என்றும் ஊடகங்களிடம் அவர் கூறியுள்ளார்.
ஆளுங்கட்சி கோரிக்கை
அதேவேளை, “எதிரணி உறுப்பினர்கள் கோப் குழுவில் இருந்து விலகுவதால் அக்குழுவின் தலைமைப் பதவியை நான் துறக்கப்போவதில்லை. ஜனாதிபதி அல்லது ஆளுங்கட்சி கோரிக்கை விடுத்தால் பதவி விலகத் தயார்.
தனக்கு எதிராகத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு இருக்கின்றது என உறுதிப்படுத்தப்பட்டால் கோப் குழுவின் தலைவர் பதவியை அல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக்கூடத் துறப்பதற்குத் தயார் என்றும் ரோஹித அபேகுணவர்தன சவால் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
