யாழில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று(05.03.2026) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம்
இந்நிலையில், 36 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பெற்றோலும், 19 நிலையங்களில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படவுள்ளது.

இதன்படி, எம்.குணரத்தினம் பரமேஸ்வரா சந்தி, எஸ்.தர்மவரதன் மருதனார்மடம், பல நோக்கு கூட்டுறவு சங்கம் பண்டத்தரிப்பு, கே.தேவகுருநாதன் கலிவியங்காடு, சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கம், மல்லாகம் பலநோக்கு கொட்டுறவு சங்கம் யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவு சங்கம், தெல்லிப்பளை பல நோக்கு கூட்டுறவு சங்கம், உட்பட 36 நிலையங்களில் பெற்றோல் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை 19 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மண்ணெண்ணெய் விநியோகமும் இடம்பெறவுள்ளது.

காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam