பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
இனி பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையினால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில்,எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்தால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கமாட்டோம் என பேருந்து உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதால் இனி பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலைக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்கும் விலைச்சூத்திரம் நடைமுறையில் உள்ளது எனவும், அதன் பிரகாரம் கட்டணத்தை அதிகரிக்காமல் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



