நாட்டில் இன்று இடம்பெறும் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாட்டில் இன்றையதினமும் சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு நடைமுறையிலிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி நாடுமுழுவதும் ஏற்படும் மின்தடை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்கள் கருத்தறிதல் விசாரணையில் மின்சார சபையின் 15 சாட்சிகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த நடைமுறையானது இலங்கையில் முதன்முறையாக இடம்பெற்றதுடன், இதன் அடுத்த விசாரிப்பு எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும், நேற்றிரவு கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.