மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருங்கும்! சர்வதேச நாணய நிதியத்தின் தகவல்
2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வளர்ச்சிக் கணிப்புகளில் தரமிறக்கம் ஏற்படும் என சர்வதேசநாணய நிதியம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தி (GDP) சுருங்கும்
இதன்படி, முந்தைய எதிர்பார்ப்புக்கு மாறாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2023ஆம் ஆண்டில் இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 சதவீதமாக இருக்கும்.

2027ஆம் ஆண்டளவில், அது 3.7 வீதமாக வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 9.2 சதவீதம் என்றும், 2023ல் அது மேலும் 4.2 சதவீதமாகவும் குறையும் என உலக வங்கி, தனது கண்ணோட்டத்தில் கணித்துள்ளது.
பொருளாதார நிலை
2022ஆம் ஆண்டில் பொருளாதாரம் 8 வீதத்தால் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், 2023ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி வரை வளர்ச்சி காணப்பட வாய்ப்பில்லை என்றும் இலங்கை மத்திய வங்கி தனது முன்னறிவிப்பில், ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இதேவேளை உலகளாவிய வளர்ச்சி 2021 இல் 6.0 சதவீதத்திலிருந்து 2022 இல் 3.2 சதவீதமாகவும், 2023 இல் 2.7 சதவீதமாகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோயின் கடுமையான கட்டத்தைத்
தவிர, 2001ஆம் ஆண்டிலிருந்து பலவீனமான நிலை தொடர்வதாகவும் சர்வதேச நாணய
நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 13 மணி நேரம் முன்
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam