அனைத்து பயணிகளிடமும் மன்னிப்புகோரிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 4 விமானங்கள் இன்று (25) காலை தாமதமாக தமது சேவையை ஆரம்பித்தமை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையினாலும் தாமதம் ஏற்படவில்லை என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

பயணிகளிடம் மன்னிப்புக்கோரிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
மேலும், இன்று ஏற்பட்ட தாமதத்தினால் அசௌகரியங்களுக்குள்ளான அனைத்து பயணிகளிடமும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மன்னிப்பு கோருவதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாத வகையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam